Tools

cphr.net

English l Sinhala l Danish l French l German l Russian

You are here: Home
Friday, 24 May 2013

cphrtamil

முல்லைத்தீவு வட்டுவாகலில் சிங்கள குடியேற்றமும், முளைத்துள்ள புத்தவிகாரையும்!

E-mail Print PDF
முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்தை துரிதப்படுத்தும் முகமாக வட்டுவாகல் கிராமத்தில் நிறுவப்பட்ட புத்தவிகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு புத்த பிக்குகளும், அதனை சுற்றி சிங்கள குடியேற்றங்களும் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 
Read more...

விசுவமடுவில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

E-mail Print PDF

வெசாக் பந்தலை மாடு சேதமாக்கியதற்காக விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more...

பரந்தனில் சொத்துக்களை அபகரிக்க கோத்தபாயவினால் கொல்லப்பட்ட கனடா தமிழர்!

E-mail Print PDF
கடந்த வாரம் பரந்தன் குமரபுரத்தில் கனடா குடியுரிமை பெற்ற தமிழரான அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா என்பவர் பரந்தன் காஞ்சிபுரம் ஒழுங்கையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
Read more...

வன்னி இறுதிப்போரில் காணாமல் போன 1 46 679 தமிழர்கள் எங்கே?

E-mail Print PDF

இலங்வைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசு மேற்கொண்டது இனப்படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவரும் நிலையில், வன்னிப் போர்களத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 1 46 679 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு, சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது

Read more...

நிமலராஜனை கொன்றவர் உட்பட 200க்கும் மேற்பட்ட போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவில்

E-mail Print PDF
பிரித்தானியாவில் இலங்கை உட்பட சில நாடுகளைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட போர்க்குற்றவாளிகள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
Read more...

வெசாக் பந்தலை மாடு சேதமாக்கியதால் சிறுவன் மீது சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம்

E-mail Print PDF

முல்லைத்தீவின் விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இராணுவத் தினரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவர் படுகாய மடைந்துள்ளான்.

Read more...

பரந்தனில் கொல்லப்பட்டவர் 13 கடைகளுக்கு சொந்தக்காரர்!

E-mail Print PDF

பரந்தன் குமரபுரம் பகுதியில் கொல்லப்பட்ட 53வயதுடைய அந்தோனிப்பிள்ளை மகேந்திரராசா என்பவர் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 13 கடைகளுக்கு சொந்தக்காரர் என்றும் 50ஏக்கருக்கு மேற்பட்;டகாணிக்கு சொந்தகாரர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த சொத்துக்கள் இவரின் தந்தையுடையது என்றும் கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த இவர் யுத்தம் முடிவடைந்த பின் பரந்தனுக்கு வந்து தமது கடைகளை மீட்டு வாடகைக்கு கொடுத்திருந்தார். 11கடைகளை வாடகைக்கு கொடுத்திருந்தார் என்றும் இரு கடைகள் இராணுவத்தினரிடம் இருப்பதாகவும் அதனையும் இராணுவத்தினரிடமிருந்து பெறுவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார் என்றும் வன்னியில் உள்ள தினக்கதிர் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள காணி தொடர்பாக யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்றும் அந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் அவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மகிந்தவின் மகன் நாபல்ராசபக்ச கிளிநொச்சியில் நிற்கும் போது இக்கொலை நடந்துள்ளது.

Page 1 of 4

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  Next 
  •  End 
  • »